Friday, November 15, 2013

பழமொழியும் அதன் அர்த்தங்களும்

1. ஊரோடு ஒத்து வாழ்
ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும்.



2. எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்
அதாவது பெரிய பணக்காரன், அவரிடம் 7 தலைமுறைக்கு எக்கச்சக்கமான பணம், அவரது வாரிசுகளோ வேலை செய்யமால் அப்பா சம்பாதித்ததை கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்தாலும் ஒரு நாள் அது கரைந்து, ஓட்டாண்டியாக வேண்டும்.

அப்புறம் விடாமுயற்சிக்கும் இந்த பழமொழியை சொல்லலாம்.
இதனை செட்டிநாட்டில் [குந்தி தின்றால் குன்றும் மாளும்] என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்  



3. நொறுங்கத் தின்றால் நூறு வயது!
கொஞ்சம் உணவே சாப்பிட்டாலும் நன்கு மென்று அரைத்து பின்னர் உள் விழுங்குவதுதான் சிறந்து. அப்போதுதான் வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் உடனே செரிமானம் ஆகும். நன்கு மெல்லாமல் நீங்கள் நிறையத் தின்றாலும் நொதித்தல் மூலம் கொஞ்சம் சத்தினை உடல் எடுத்துக் கொண்டு மீதியை பின்பக்கமாக வெளியேற்றிவிடும். எனவே கொஞ்சமாகத் தின்றாலும் நன்கு அரைத்து மென்று திங்க வேண்டும். அவ்வாறு தின்றால் நூறு வயது வாழலாம் என்கிறது இந்த பழமொழி.

ஆடு, மாடுகள் மேய்ந்த பலமணி நேரம் கழித்தும்கூட அசைபோடுவதை நீங்கள் கண்டிருக்கலாம்.


4. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி, இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது! அது தனது குழந்தை அல்லவா? அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன்,குருடு,செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்!


Download As PDF

No comments:

Post a Comment